விஜய் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? - வினீத் சீனிவாசன் விளக்கம்

விஜய் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? - வினீத் சீனிவாசன் விளக்கம்
Updated on
1 min read

சென்னை: நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இதில் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால், நடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் மலையாள நடிகரும் இயக்குநருமான வினீத் சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “விஜய்யின் கோட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் இயக்கி நடிக்கும் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில் நான் பிசியாக இருந்ததால் அந்த வாய்ப்பை நிராகரிக்கும் துரதிர்ஷ்டம் ஏற்பட்டுவிட்டது. வெங்கட் பிரபு என்னிடம் கேட்டபோது, இந்த வாய்ப்பை விட விரும்பவில்லை, ஆனாலும் எனக்கு வேறு வழியில்லை என்றேன்” எனக் கூறியுள்ளார்.

வினீத் சீனிவாசனின் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில், பிரணவ் மோகன்லால், தியான் சீனிவாசன், கல்யாணி பிரியதர்ஷன், பசில் ஜோசப், ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். சினிமா வாய்ப்பு தேடி சென்னை வரும் 2 இளைஞர்களைப் பற்றிய கதை இது. பீரியட் படமான இது வரும் 11-ம் தேதி வெளியாக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in