சூர்யாவின் ‘கங்குவா’ டீசர் செவ்வாய்க்கிழமை ரிலீஸ்: படக்குழு அறிவிப்பு

சூர்யாவின் ‘கங்குவா’ டீசர் செவ்வாய்க்கிழமை ரிலீஸ்: படக்குழு அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் டீசர் நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் நாளை (மார்ச் 19) மாலை 4.30 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘கங்குவா’ திரைப்படம் ஒரு பாதி இந்த காலகட்டத்தில் நடப்பது போலவும், இன்னொரு பாதி பீரியட் படமாகவும் உருவாகியுள்ளது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஃபேன்டஸி, முன்ஜென்மம், மறுபிறவி உள்ளிட்ட அம்சங்கள் இப்படத்தில் இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in