ஹிப்ஹாப் ஆதியின் ‘பி.டி.சார்’ படப்பிடிப்பு நிறைவு

ஹிப்ஹாப் ஆதியின் ‘பி.டி.சார்’ படப்பிடிப்பு நிறைவு
Updated on
1 min read

சென்னை: நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடித்து வந்த ‘பி.டி.சார்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் வேணுகோபாலன், அடுத்து ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘பி.டி.சார்' என்று தலைப்பு வைத்துள்ளனர். கஷ்மிரா பர்தேசி நாயகியாக நடிக்கிறார்.

அனிகா சுரேந்திரன், பிரபு, முனீஷ்காந்த், பாண்டியராஜன், இளவரசு,தியாகராஜன் உட்பட பலர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார்.

விளையாட்டுத் துறை ஆசிரியரின் வாழ்வியலைப் பேசுகிறதாம் இந்தப் படம். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘வீரன்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in