விளையாட்டு ஆசிரியர் பற்றிய ‘பி.டி.சார்’

விளையாட்டு ஆசிரியர் பற்றிய ‘பி.டி.சார்’
Updated on
1 min read

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் வேணுகோபாலன், அடுத்து ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் படத்தை இயக்குகிறார். ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘பி.டி.சார்' என்று தலைப்பு வைத்துள்ளனர். கஷ்மிரா பர்தேசி நாயகியாக நடிக்கிறார்.

அனிகா சுரேந்திரன், பிரபு, முனீஷ்காந்த், பாண்டியராஜன், இளவரசு,தியாகராஜன் உட்பட பலர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். இதன் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை ஆசிரியரின் வாழ்வியலைப் பேசும் படம் இது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு கரூரில் நடக்கிறது என்றது, படக்குழு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in