பெண் டிடெக்டிவ் வேடத்தில் த்ரிஷா: பெரும் பொருட்செலவில் உருவாகும் குற்றப்பயிற்சி

பெண் டிடெக்டிவ் வேடத்தில் த்ரிஷா: பெரும் பொருட்செலவில் உருவாகும் குற்றப்பயிற்சி
Updated on
1 min read

ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் சார்பாக ஜி. விவேகானந்தன், மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் 'குற்றப்பயிற்சி'. இதில் பெண் டிடெக்டிவ் வேடத்தில் நடிகை த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தியாவின் முதல் பெண் டிடெக்டிவ் ரஜனி பண்டிட். இவர் விசாரித்த ஒரு வழக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் குற்றப்பயிற்சி. 'தாரை தப்பட்டை' படத்தில் இயக்குநர் பாலாவிடம் பணிபுரிந்த வெர்னிக் இயக்குநராக அறிமுகமாகிறார்.

1980 காலகட்டத்தின் பின்னணியில் நடக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில், பெண் துப்பறிவாளராக முதன்மை கதாபாத்திரம் ஏற்று த்ரிஷா நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் , சுரபி, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு கொலையும், அதன் பின்னணியும் துப்புதுலக்கும் விதமாக விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாகவுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் படத்தின் முதன்மை கதாபாத்திரம் பெண் துப்பறிவாளராக நடிப்பது இதுவே முதல் முறை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in