நடிகர் விக்ரம் படத்தில் இணையும் எஸ்.ஜே.சூர்யா: அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகர் விக்ரம் படத்தில் இணையும் எஸ்.ஜே.சூர்யா: அதிகாரபூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: நடிகர் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

‘தங்கலான்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம், ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சித்தா’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண் குமாருடன் இணைகிறார். விக்ரம் நடிக்கும் 62-வது படமான இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ரியா ஷிபு தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

திருத்தணி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐசி’ படங்களில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in