விக்ரம் 62 படப்பிடிப்பு எப்போது?

விக்ரம் 62 படப்பிடிப்பு எப்போது?
Updated on
1 min read

‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படம் ஜன.26-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம், ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சித்தா’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண் குமாருடன் இணைகிறார். விக்ரம் நடிக்கும் 62-வது படமான இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ரியா ஷிபு தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. திருத்தணி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in