“என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு அன்பு சலாம்” - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு

நடிகர் ரஜினிகாந்த் | மகள் ஐஸ்வர்யா
நடிகர் ரஜினிகாந்த் | மகள் ஐஸ்வர்யா
Updated on
1 min read

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீல் சேரில் அமந்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடித்த ‘3', கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் படம், ‘லால் சலாம்'. விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்துள்ள லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த்தும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ எனும் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லால் சலாம் படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில், ”என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in