செர்பியாவில்  ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு

செர்பியாவில்  ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு
Updated on
1 min read

இயக்குநர் மணிரத்னமும் கமல்ஹாசனும் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது. பின்னர் கமல்ஹாசன் சொந்த வேலை காரணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம், இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் சிவா ஆகியோர் செர்பியா சென்றுள்ளனர். அங்கு ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற இருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் அங்கிருந்து செர்பியா சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு, மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in