விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றம்?

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றம்?

Published on

சென்னை: தான் கொடுத்த வாக்குறுதியின்படி மறைந்த நடிகர் விஜயகாந்த் மகனின் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகரும், தேமுதிக நிறுவனத்தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலகைத் தாண்டி தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஏராளமானோர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில், சிலர் அவரது மகனின் எதிர்காலத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டினர். அப்படி நடிகர் ராகவா லாரன்ஸ், “விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க தயார்” எனத் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் தற்போது தான் அளித்த வாக்குறுதியின்படி விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘படை தலைவன்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகர் ராகவா லாரன்ஸ் 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அன்பு இயக்குகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இதில் கலந்துகொண்டு லாரன்ஸ் நடிப்பார் என தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in