இயக்குநர் கோகுலுடன் கைகோக்கும் விஷ்ணு விஷால்! 

இயக்குநர் கோகுலுடன் கைகோக்கும் விஷ்ணு விஷால்! 
Updated on
1 min read

சென்னை: இயக்குநர் கோகுல் இயக்க உள்ள புதிய படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோகுல். இவரது இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் இம்மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் நடிக்கிறார் விஷ்ணு விஷால். ‘லால் சலாம்’ படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் இது. ‘கட்டா குஸ்தி’ படத்துக்கு பிறகு விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ள இப்படம் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in