விஜய்குமாரின் ‘ஃபைட் கிளப்’ ரூ.5.75 கோடி வசூல்!

விஜய்குமாரின் ‘ஃபைட் கிளப்’ ரூ.5.75 கோடி வசூல்!
Updated on
1 min read

சென்னை: ‘உறியடி’ விஜய்குமார் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘ஃபைட் கிளப்’ திரைப்படம் ரூ.5.75 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘உறியடி’ திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற விஜய்குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ திரைப்படம் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை அப்பாஸ் ரஹம்த் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மோனிஷா, கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். ஆதித்யாவின் ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனமும், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜிஸ்குவாட் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் மேக்கிங் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், படம் வார விடுமுறை நாட்களில் ரூ.5.75 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.7 கோடி என கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in