வசந்த் ரவி நடிக்கும் ‘இந்திரா’

வசந்த் ரவி நடிக்கும் ‘இந்திரா’
Updated on
1 min read

சென்னை: வசந்த் ரவி நடிக்கும் புதிய படத்துக்கு ‘இந்திரா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஜெ.எஸ்.எம்.பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக், எம்பரர் என்டர்டெயின்மென்ட் சார்பில் இர்ஃபான் மாலிக் இணைந்து தயாரிக்கும் படம், ‘இந்திரா’. இதில் வசந்த் ரவி ஹீரோவாக நடிக்கிறார். சபரீஷ் நந்தா இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மெஹ்ரின் பிர்சாடா நாயகியாக நடிக்கிறார். மேலும் அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டுள்ளனர்.

அரவிந்த் சாமி, அனுஹாசன் நடிப்பில், சுகாசினி மணிரத்னம் இயக்கி 1995ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘இந்திரா’. அந்த தலைப்பை இந்தப் படத்துக்குப் பயன்படுத்தியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in