தொழுகையில் ரஜினி - ஐஸ்வர்யாவின் ‘லால் சலாம்’ கிளிம்ஸ் வீடியோ எப்படி?

தொழுகையில் ரஜினி - ஐஸ்வர்யாவின் ‘லால் சலாம்’ கிளிம்ஸ் வீடியோ எப்படி?
Updated on
1 min read

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்'. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில், படத்தின் சிறப்பு க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

வீடியோ எப்படி? - கருப்பு கலர் காரில் மாஸாக இன்ட்ரோ கொடுக்கிறார் ரஜினி. அடுத்த காட்சியே கையில் இரும்பு ஜெயினுடன் ஆக்‌ஷன்தான். பின்னணியில் ‘ஜலாலீ... ஜலாலீ’ என ஏ.ஆர்.ரஹ்மான் குரல் ஒலிக்க தனக்கே உரித்தான ஸ்டைலில் ‘கெத்தாக’ நடந்து வருகிறார் ரஜினி. டீசரின் இறுதியில் ரஜினி தொழுவது (இஸ்லாமியர்களின் இறைவழிபாடு) போன்ற காட்சியும் ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரகாத்தஹூ’ என்ற வார்த்தையும் ஒலிக்கிறது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவது குறிப்பிடத்தக்கது. வீடியோ:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in