“பல பேர் உயிரை எடுக்க காத்துட்டு இருக்கு” - ஹன்சிகாவின் ‘கார்டியன்’ டீசர் எப்படி?

“பல பேர் உயிரை எடுக்க காத்துட்டு இருக்கு” - ஹன்சிகாவின் ‘கார்டியன்’ டீசர் எப்படி?
Updated on
1 min read

ஹன்சிகா நடித்துள்ள ‘கார்டியன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஹன்சிகா பேயாக நடித்துள்ளார்.

அண்மையில் வெளியான எம்.ராஜேஷின் ‘மை3’ வெப்சீரிஸில் ஹன்சிகா நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கார்டியன்’. சபரி மற்றும் குருசரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் ஹன்சிகா பேயாக நடித்துள்ளார். சுரேஷ் மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், பிரதீப் ராயன், டைகர் கார்டன் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசர் எப்படி?: ‘இந்த கொடூர ஆத்மா பல பேரோட உயிர எடுக்க காத்துட்டு இருக்கு’ என மொட்டை ராஜேந்தின் குரலில் ஒலிக்கும் வசனத்துடன் டீசர் தொடங்குகிறது. பேயாக சில காட்சிகளில் ஹன்சிகாவை ஏற்றுக்கொள்வது சிரமமாக உள்ளது. அவரது ரியாக்சன்ஸ் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

குறிப்பாக ‘நீ கோயில்ல இருந்தாலே கொன்னு பொதச்சுடுவேன். இது என் எடம்’ என அவர் பேசும் இடமும், அதைத் தொடர்ந்து அவரின் ஆக்சனும் இன்னும் மெனக்கெடலை கோருகிறது. ‘அரண்மனை’க்கு பிறகு நடிகை ஹன்சிகா இந்தப்படத்தில் பேயாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in