சுவாரஸ்ய ரொமான்டிக் காமெடி களம் - எம்.ராஜேஷின் ‘MY3’ வெப் சீரிஸ் ட்ரெய்லர் எப்படி?

சுவாரஸ்ய ரொமான்டிக் காமெடி களம் - எம்.ராஜேஷின் ‘MY3’ வெப் சீரிஸ் ட்ரெய்லர் எப்படி?
Updated on
1 min read

இயக்குநர் எம்.ராஜேஷின் ‘மை3’ (MY3) வெப் சீரிஸின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கின்ற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் எம்.ராஜேஷ். கடந்த 2019-ம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் தோல்வியை தழுவியது. 2021-ல் அவர் இயக்கிய ‘வணக்கம்டா மாப்பிளை’ படமும் ரசிகர்களை கவரவில்லை. தற்போது அவர் ஜெயம் ரவியை வைத்து ‘ஜெஆர்30’ படத்தை இயக்கி வருகிறார்.

இதையடுத்து வெப் சீரிஸ் ஒன்றையும் இயக்குகிறார். இந்த வெப் சீரிஸுக்கு ‘மை3’ என தலைப்பிடப்பட்டுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெளியிடும் இந்தத் தொடரில் ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஜனனி , அஷ்னா ஜவேரி முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரொமான்டிக் காமெடி ஜானரில் ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸுக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் கணேசன் இசையமைத்துள்ளார். அஷிஷ் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.

ட்ரெய்லர் எப்படி? - மொத்த கதையும் ட்ரெய்லரிலேயே வெளிப்படுகிறது என்றாலும் ஐடியாவாக வெப் சீரிஸ் ஈர்க்கிறது. மனித தொடுதல் ஒவ்வாமைகொண்ட ஒருவர் மனித உரு கொண்ட ரோபோ ஒன்றை வாங்க முயல்கிறார். அந்த ரோபோவில் பிரச்சினை ஏற்பட, அதையொட்டிய உருவம் கொண்ட ஹன்சிகாவை ரோபாவாக நடிக்க வைக்கிறார்கள். அதன்பின் என்ன நடந்தது என்பது திரைக்கதையாக இருக்கும் என்பது தெரிகிறது. இந்த ஐடியாவை ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாக்கியிருக்கிருப்பதை காட்சிகள் உணர்த்துகின்றன. இறுதியில் ஒரு ட்விஸ்டுடன் ட்ரெய்லர் முடிகிறது. இயக்குநர் ‘எம்.ராஜேஷ் இஸ் பேக்’ என சீரிஸ் சொல்ல வைக்குமா என்பதை செப்டம்பர் 15-ம் தேதி தான் சொல்ல முடியும். ஹாட்ஸ்டார் ஓடிடியில் சீரிஸ் வெளியாவது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லர் வீடியோ;

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in