Published : 26 Oct 2023 08:02 PM
Last Updated : 26 Oct 2023 08:02 PM

கமல்ஹாசன் - மணிரத்னம் படத்தின் ப்ரொமோ வீடியோ நவ.7-ல் வெளியீடு

சென்னை: கமல்ஹாசன் - மணிரத்னம் காம்போவில் உருவாகும் படத்தின் அறிவிப்பு வீடியோவை கமலின் பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் நடித்த ‘இந்தியன் 2’ படத்தை முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி’, ஹெச்.வினோத், மணிரத்னம் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் அறிமுகத் தோற்றம் கமல்ஹாசன் பிறந்த நாளான நவ.7ம் தேதி வெளியாகிறது.

அதேபோல கமல்ஹாசன் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு மற்றொரு சர்ப்ரைஸூம் காத்திருக்கிறது. ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்தின் ப்ரொமோ வீடியோவும் அதே நாளில் வெளியாகிறது. இதற்கான படப்பிடிப்பு கடந்த 21-ம் தேதி சென்னை பின்னி மில்லில் தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.

இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இது தொடர்பாக படத்தின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில், மணிரத்னம் - கமல் இணைந்து சிரித்து பேசிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ‘‘விரைவில் கொண்டாட்டம் தொடங்கட்டும்’’ என பதிவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x