விஜய்யின் ‘லியோ’ 4 நாட்களில் ரூ.400 கோடி வசூல்!

விஜய்யின் ‘லியோ’ 4 நாட்களில் ரூ.400 கோடி வசூல்!
Updated on
1 min read

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் உலக அளவில் 4 நாட்களில் ரூ.400 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்த சிக்கலால் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகே சென்னையின் பல திரையரங்குகளில் படம் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், ‘லியோ’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. தொடர்ந்து விடுமுறை நாட்களால் படத்தின் வசூல் கூடியதையடுத்து, படம் வெளியான 4 நாட்களில் உலக அளவில் ரூ.400 கோடியை ‘லியோ’ வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.250-350 கோடி பட்ஜெட்டுக்குள் உருவானதாக கூறப்படும் இப்படம் லாபத்தை ஈட்டியுள்ளது. மேலும் இப்படம் ரஜினியின் ‘ஜெயிலர்’ பட ஒட்டுமொத்த வசூலான ரூ.600 கோடியை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in