விஜய்யின் ‘லியோ’ ரூ.250 கோடி வசூலித்துள்ளதாக தகவல்

விஜய்யின் ‘லியோ’ ரூ.250 கோடி வசூலித்துள்ளதாக தகவல்
Updated on
1 min read

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் ரூ.250 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்த சிக்கலால் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகே சென்னையின் பல திரையரங்குகளில் படம் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், ‘லியோ’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. தொடர்ந்து விடுமுறை நாட்களால் படத்தின் வசூல் கூடியதையடுத்து, 3 நாட்களில் உலக அளவில் படம் ரூ.250 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு பேசும் மாநிலங்களில் மட்டும் 3 நாட்களில் படம் ரூ.32 கோடியை வசூலித்துள்ளதாகத் தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in