விஷால் படத்தில் இணைந்த இயக்குநர்கள்

விஷால் படத்தில் இணைந்த இயக்குநர்கள்
Updated on
1 min read

சென்னை: இயக்குநர் ஹரி, விஷால் ஹீரோவாக நடிக்கும் படத்தை இப்போது இயக்கி வருகிறார். இதில் பிரியாபவானி சங்கர் அவர் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இதன் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்துள்ளனர். இதை விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in