ரஜினி படத்துக்காக அமிதாப் சம்பளம் எவ்வளவு?

ரஜினி படத்துக்காக அமிதாப் சம்பளம் எவ்வளவு?
Updated on
1 min read

சென்னை: ‘ஜெயிலர்’ படத்தை அடுத்து, ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதையடுத்து அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்குகிறார். ரஜினியின் 170-வது படமான இதில் , 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். அவர் தவிர, ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா , ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்காக அமிதாப் பச்சன் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் இதற்காக அவருக்கு ரூ.12 முதல் ரூ.15 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in