தொடங்கியது ‘ஜென்டில்மேன் 2’ படப்பிடிப்பு

தொடங்கியது ‘ஜென்டில்மேன் 2’ படப்பிடிப்பு
Updated on
1 min read

சென்னை: கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் படம் 'ஜென்டில்மேன் 2'. ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இந்தப்படத்துக்கு ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். சேத்தன், நயன்தாரா சக்கரவர்த்தி, பிரியா லால், பிராச்சி தெஹ்லான், சித்தாரா, ஸ்ரீ ரஞ்சனி உட்பட பலர் நடிக்கின்றனர். அஜயன் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னை, சத்யா ஸ்டூடியோவில் நேற்று தொடங்கியது. செய்தித்துறை அமைச்சர் எம்.பி.சாமிநாதன் ஸ்விட்ச் ஆன் செய்ய, சத்யா ஸ்டூடியோ தலைவர் குமார் ராஜேந்திரன் கிளாப் அடிக்க படப்பிடிப்பு ஆரம்பமானது. சென்னையில் தொடர்ந்து 25 நாட்கள் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in