‘ரஜினி 170’ படத்தில் ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி - லைகா அறிவிப்பு

‘ரஜினி 170’ படத்தில் ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி - லைகா அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: ரஜினியின் 170வது படத்தில் நடிகர்கள் ஃபஹத் ஃபாசில் மற்றும் ராணா டகுபதி இருவரும் இணைய உள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முதல் படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இப்படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர்கள் ஃபஹத் ஃபாசில் மற்றும் ராணா டகுபதி இருவரும் இணைய உள்ளதாக லைகா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் இன்று திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றுள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இப்படம் நல்ல கருத்துள்ள பிரம்மாண்ட பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in