'லியோ' ட்ரெய்லர் அக்.5ல் வெளியாகிறது - படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு

'லியோ' ட்ரெய்லர் அக்.5ல் வெளியாகிறது - படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் வரும் அக்.5 அன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் மற்றொரு பாடலான 'Badass' வெளியானது. படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து படக்குழுவிடம் கேள்வி எழுப்பி வந்த நிலையில் வரும் அக்.5 ஆம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in