Published : 29 Sep 2023 05:42 PM
Last Updated : 29 Sep 2023 05:42 PM

சுந்தர்.சி-யின் ‘அரண்மனை 4’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு - பொங்கல் ரிலீஸ்

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது ‘அரண்மனை’. 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சித்தார்த் நடித்திருந்தார். 2021-ம் ஆண்டு இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது. ஆர்யா, ராஷிகண்ணா, சாக்‌ஷிஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஹாரர் - காமெடி ஜானரில் சீரிஸாக வெளியாகும் இப்படத்தின் நான்காவது பாகத்துக்கான அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப்படத்தையும் சுந்தர்.சியே இயக்குகிறார். இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி படத்துக்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

தோற்றத்தை பொறுத்தவரை அரண்மனைக்கு வெளியே பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளுடன் நின்றுகொண்டிருக்கிறார். அரண்மனைக்கு பின்னால் பேய் உருவம் ஒன்று காட்டப்படுகிறது. படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x