யூடியூபில் வெளியானது ‘ஜெயிலர்’ பட ‘காவாலா’ பாடல்

யூடியூபில் வெளியானது ‘ஜெயிலர்’ பட ‘காவாலா’ பாடல்
Updated on
1 min read

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் உலக அளவில் ரூ.600 கோடி வசூலித்து முன்னேறி வருகிறது.

இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘காவாலா’ பாடல் படம் ரிலீஸூக்கு முன்பே வெளியாகி ரசிகர்களிடையே ஹிட்டடித்தது. இப்பாடல் யூடியூபில் வெளியான நான்கு வாரங்களில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளை கடந்தது. இந்நிலையில், தற்போது படத்தின் ஒரிஜினல் வீடியோவை சன்பிக்சர்ஸ் நிறுவனம் சன்டிவி யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள இப்பாடல் வரிகளை சில்பா ராவ், அனிருத் இணைந்து பாடியுள்ளனர். மேலும் நாளை (செப்.7) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெயிலர்’ படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. | பாடல் வீடியோ:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in