அஜித் ஜோடியாக மீண்டும் ஹூமா குரேஷி?

அஜித் ஜோடியாக மீண்டும் ஹூமா குரேஷி?
Updated on
1 min read

சென்னை: ‘வலிமை’ படத்துக்குப் பிறகு அஜித்குமார் நடிக்கும் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். ‘விடாமுயற்சி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. இதில் த்ரிஷா நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ஹூமா குரேஷி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு துபாய் மற்றும் அபுதாபியில் நடக்க இருப்பதாகவும் இயக்குநர் மகிழ் திருமேனி அங்கு லொகேஷன் பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது என்கிறார்கள்.

இந்தி நடிகையான ஹூமா குரேஷி, தமிழில் காலா, வலிமை படங்களில் நடித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in