போலீஸ் கேரக்டரில் மீண்டும் சிவகார்த்திகேயன்

போலீஸ் கேரக்டரில் மீண்டும் சிவகார்த்திகேயன்
Updated on
1 min read

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதில் ராணுவ மேஜராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார். இதையடுத்து அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் ஜோடியாக, மிருணாள் தாக்குர் நடிக்க இருக்கிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தில் அவர், போலீஸ் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அது மாஸான கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.

துரை செந்தில்குமார் இயக்கிய ‘காக்கிச்சட்டை’ படத்தில் ஏற்கெனவே போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். அதில் அவர் ஜோடியாக திவ்யா நடித்திருந்தார். அனிருத் இசை அமைத்திருந்த இந்தப் படம் 2015-ம்ஆண்டு வெளியானது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் மீண்டும் போலீஸ் கேரக்டரில் நடிக்க இருக்கிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in