Published : 13 Aug 2023 02:09 PM
Last Updated : 13 Aug 2023 02:09 PM

உலக அளவில் ரூ.150 கோடி வசூலைக் குவித்த ரஜினியின் ‘ஜெயிலர்’

சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் உலக அளவில் ரூ.150 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படம் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.52 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. உலக அளவில் முதல் நாள் ரூ.70 கோடி. இந்நிலையில் படம் வெளியாகி இன்றுடன் 3 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை உலகளவில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x