‘டியர்’ படப்பிடிப்பு நிறைவு

‘டியர்’ படப்பிடிப்பு நிறைவு
Updated on
1 min read

சென்னை: ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம், ‘டியர்’. ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். நட்மெக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி இணைந்து தயாரிக்கின்றனர். இதில், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி 35 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது ​​போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in