அஜித்தின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு எப்போது?

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு எப்போது?
Updated on
1 min read

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்தப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் விக்னேஷ் சிவன், படத்திலிருந்து விலக்கப்பட்டார். இதையடுத்து அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்தது. ‘விடாமுயற்சி’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் ஆகஸ்ட் இறுதியில் தொடங்குவதாக கூறப்பட்டது. ஆனால் விசாரித்தபோது செப்டம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குவதாக தெரிவித்தனர். இதில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in