Published : 29 Jul 2023 05:50 AM
Last Updated : 29 Jul 2023 05:50 AM
சென்னை: ஆதி, நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், மைம் கோபி, ஆனந்த் ராஜ் நடித்து, 2017-ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் ‘மரகத நாணயம்’. ஏஆர்கே சரவன் இயக்கி இருந்தார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி.டில்லிபாபு தயாரித்த இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து ஹிப் ஹாப் ஆதி நடித்த ‘வீரன்’ படத்தை இயக்கி இருந்தார் ஏஆர்கே சரவன்.
இந்நிலையில் ‘மரகத நாணயம்’ படத்தின் 2-ம் பாகம்உருவாக இருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில்சரவன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, “முதல் பாகத்தில் நடித்தவர்கள் இதிலும் தொடர்வார்கள். மேலும் சில முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை இப்போது சொல்ல இயலாது. ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருகின்றன. இந்த வருடஇறுதியில் படப்பிடிப்புத் தொடங்கும். அடுத்த வருடக் கோடையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT