தோனி சினிமாவில் நுழைகிறாரா? - சாக்‌ஷி விளக்கம்

தோனி சினிமாவில் நுழைகிறாரா? - சாக்‌ஷி விளக்கம்
Updated on
1 min read

சென்னை: நல்ல கதை அமைந்தால் தோனி சினிமாவில் நடிக்கக் கூடும் என்று அவரது மனைவி சாக்‌ஷி தோனி தெரிவித்துள்ளார்.

தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம், தமிழில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தை தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் ரமேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகை நதியா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். மலையாள இசையமைப்பாளர் விஸ்வஜித் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியனது.

இப்படத்தை விளம்பரப் படுத்தும் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (ஜூலை 25) சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் சாக்‌ஷியிடம், “தோனி சினிமாவிலும் கால் பதிப்பாரா?” என்று கேட்கப்பட்டது. இதற்கு பதலளித்த அவர், "நல்ல கதை என்றால் அவர் அதில் நடிக்கலாம். அவர் ஏற்கெனவே ஏராளமான விளம்பரங்களில் நடித்துள்ளார். அவருக்கு கேமரா பயம் கிடையாது. எப்படி நடிக்க வேண்டும் என்றும் அவருக்கு தெரியும். 2006ஆம் ஆண்டு முதல் கேமரா முன்னால் நடித்து வருகிறார். ஏதேனும் நல்ல கதை அமைந்தால், அதில் அவர் நடிக்கக் கூடும். அவருக்கான கதையை தேர்வு செய்யவேண்டுமென்றால், நான் ஆக்‌ஷன் கதைகளைத் தான் தேர்ந்தெடுப்பேன். அவருக்கு ஆக்‌ஷன் படங்கள் மிகவும் பிடிக்கும்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in