அடுத்த பட ஷூட்டிங்: போர்ச்சுக்கல் செல்கிறார் அதிதி

அடுத்த பட ஷூட்டிங்: போர்ச்சுக்கல் செல்கிறார் அதிதி
Updated on
1 min read

சென்னை: நடிகை அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த ‘விருமன்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மாவீரன்’படத்தில் நடித்தார். இந்தப் படமும் கமர்சியல் வெற்றி பெற்றுள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கும் அதிதி, அடுத்த படத்துக்காக போர்ச்சுக்கல் செல்கிறார்.

நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை விஷ்ணுவர்தன் இயக்குகிறார். இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் ஆகாஷ் முரளி ஜோடியாக அதிதி நடிக்கிறார். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையில் நடந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் ஏற்கெனவே நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அதிதி இன்று போர்ச்சுக்கல் செல்கிறார். அங்கு அடுத்த மாத இறுதிவரைப் படப்பிடிப்பு நடக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in