விக்ரம் - கவுதம் வாசுதேவ் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ 2-வது சிங்கிள் ஜூலை 19-ல் ரிலீஸ்

விக்ரம் - கவுதம் வாசுதேவ் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ 2-வது சிங்கிள் ஜூலை 19-ல் ரிலீஸ்
Updated on
1 min read

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வரும் ஜூலை 19-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரமை வைத்து இயக்குநர் கவுதம் வாசு தேவ் மேனன் இயக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா நடித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘ஒரு மனம்’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. ஆனால், படத்தின் அடுத்த அப்டேட் குறித்து தெரியாமல் இருந்தது.

இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்ட பதிவில், “துருவ நட்சத்திரம் படத்துக்கான பின்னணி இசைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. டால்பி 9.1.4 தரத்தில் விரைவில் திரையரங்கில் சந்திக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

அண்மையில் கவுதம் வாசுதேவ் மேனன் அளித்த பேட்டியில் அடுத்து ‘துருவ நட்த்திரம்’ படம் தான் என பேசியிருந்தார். இந்நிலையில் படத்தின் 2-வது சிங்கிள் பாடல் ஜூலை 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in