ஆர்கே ஜோடியாக மால்வி மல்ஹோத்ரா

ஆர்கே ஜோடியாக மால்வி மல்ஹோத்ரா
Updated on
1 min read

சென்னை: திலீப், கீர்த்தி சுரேஷ், ஹனிரோஸ் உட்பட பலர் நடித்த மலையாள படம், ‘ரிங் மாஸ்டர்’. ரஃபி இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு கோபி சுந்தர் இசை அமைத்திருந்தார். 2014-ம் ஆண்டு வெளியான இந்த நகைச்சுவை படம் சூப்பர் ஹிட்டானது.

இது இப்போது தமிழில் ரீமேக் ஆகிறது. ஆர்.கண்ணன் இயக்கும் இந்தப் படத்தில் ஆர்கே நாயகனாக நடிக்கிறார். இவர், எல்லாம் அவன் செயல், அழகர்மலை, வைகை எக்ஸ்பிரஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் அபிராமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹீரோயினாக மால்வி மல்ஹோத்ரா நடிக்கிறார். பஞ்சாபி, தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ள மால்வி, இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு வரும் 7-ம் தேதி தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.மால்வி மல்ஹோத்ரா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in