சந்திரமுகி 2 ரிலீஸ் எப்போது?

சந்திரமுகி 2 ரிலீஸ் எப்போது?
Updated on
1 min read

ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு நடித்து 2005-ம் ஆண்டு வெளியான படம், சந்திரமுகி. இதன் 2-ம் பாகம் இப்போது உருவாகியுள்ளது. பி.வாசு இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, மஹிமா நம்பியார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. கீரவாணி இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் நடந்து வருகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி விநாயகர் சதுர்த்தி அன்று செப்.19ம் தேதி வெளியாகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in