‘கேப்டன் மில்லர்’ அப்டேட் | கன்னட நடிகர் சிவராஜ்குமார் தொடர்பான காட்சிகள் நிறைவு

‘கேப்டன் மில்லர்’ அப்டேட் | கன்னட நடிகர் சிவராஜ்குமார் தொடர்பான காட்சிகள் நிறைவு
Updated on
1 min read

சென்னை: தனுஷ் நடித்துவரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இதில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆறு மாதங்களாக இப்படத்தில் நடித்து வந்த அவருக்கான படப்பிடிப்பு நேற்றுடன் (ஜூன் 19) நிறைவடைந்தது. மேலும் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இந்த மாத இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் பிறந்த நாளான ஜூன் 28-ம் தேதி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ‘கேப்டன் மில்லர்’ தவிர நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்திலும் சிவராஜ்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in