அசின் - ராகுல் சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை: ட்விட்டரில் தகவல் பகிர்வு

அசின் - ராகுல் சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை: ட்விட்டரில் தகவல் பகிர்வு
Updated on
1 min read

நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை ராகுல் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகை அசின், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல்சர்மாவை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். செவ்வாய்க்கிழமை அன்று இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதுபற்றி ராகுல் சர்மா, "எங்கள் தேவதைப் பெண் குழந்தை இன்று காலை பிறந்தாள் என்பதைச் சொல்வதில் பரவசமடைகிறோம். எங்கள் இருவருக்குமே கடந்த 9 மாதங்கள் மிக விசேஷமானதாகவும், உற்சாகமானதாகவும் இருந்தது. எங்கள் நலம்விரும்பிகள் அனைவருக்கும், எங்களுக்கு தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்துவரும் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறோம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in