மலேசியாவில் விஜய் சேதுபதி முதல்கட்ட ஷூட்டிங் நிறைவு

மலேசியாவில் விஜய் சேதுபதி முதல்கட்ட ஷூட்டிங் நிறைவு
Updated on
1 min read

விஜய் சேதுபதி நடிப்பில் பி.ஆறுமுக குமார் இயக்கும் புதிய படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நிறைவடைந்தது

நடிகர் விஜய் சேதுபதி, 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' பி.ஆறுமுக குமார் இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தில் யோகி பாபு, ருக்மணி வசந்த், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். 7 சி’ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள ஈப்போ நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இப்போது இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in