ஆக.25-ல் ஜெயம் ரவி, நயன்தாராவின் ‘இறைவன்’ ரிலீஸ்

ஆக.25-ல் ஜெயம் ரவி, நயன்தாராவின் ‘இறைவன்’ ரிலீஸ்
Updated on
1 min read

ஜெயம் ரவியின் ‘இறைவன்’ திரைப்படம் ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் ‘இறைவன்’. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் மீண்டும் இந்தப் படத்திற்காக இணைந்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படத்தின் முதல் பார்வை ஜனவரி 23-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், படம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ‘சைரன்’, ‘ஜெஆர்30’ உள்ளிட்ட படங்களில் ஜெயம் ரவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in