

யஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் முதல்நாள் டிக்கெட் முன்பதிவு சுமார் 20 கோடியை நெருங்கி உள்ளது.
‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தைத் தொடர்ந்து, நான்கு வருட இடைவெளிக்கு பின் யஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘டாக்ஸிக்’ படம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்துக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.
டிக்கெட் முன்பதிவு விபரங்களின்படி ‘டாக்ஸிக்’ படம் அதன் முதல்நாள் டிக்கெட் முன்பதிவாக இந்தியாவில் ரூ.11.74 கோடி வசூல் செய்துள்ளது. இதில் கன்னட மொழியில் சுமார் ரூ. 7.72 கோடிக்கும், அதற்கு அடுத்தபடியாக இந்தி மொழியில் ரூ.3.86 கோடிக்கும் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன.
முன்பதிவாக இல்லாமல் ப்ளாக் செய்திருக்கும் எண்ணிக்கையையும் சேர்த்து படத்துக்கான முதல்நாள் டிக்கெட் விற்பனை சுமார் 19.44 கோடி விற்பனையாகி உள்ளது.
யஷ் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கீது மோகன்தாஸின் கதைக்கு நாயகன் யஷ்ஷும் அவருடன் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார். விஷால் மிஸ்ரா படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.