ஹாலிவுட்டுக்கு சென்றது ஏன்? - பிரியங்கா சோப்ரா விளக்கம்

ஹாலிவுட்டுக்கு சென்றது ஏன்? -  பிரியங்கா சோப்ரா விளக்கம்
Updated on
1 min read

ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் இதில் மகேஷ்பாபு ஹீரோ. இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் ஹாலிவுட்டுக்கு சென்றது ஏன் என்பது பற்றி பிரியங்கா சோப்ரா கூறியதாவது: பாலிவுட்டை விட்டு வெளி​யேற நான் நினைத்​த​தில்​லை. அங்கு பணிபுரிந்​த​போது பல காரணங்​களுக்​காக ஒதுக்​கப்​படு​வ​தாக உணர்ந்​த​தால், என் எல்​லையை விரிவுபடுத்த நினைத்தேன்.

ஒரு நடிகை​யாக எனக்கு உற்​சாக​மாக இருக்​கும் வாய்ப்​பு​களைத் தேடும் ஆசை ஏற்​பட்​டது. அமெரிக்கா சென்று நடிக்​கத் தொடங்​கினேன்​. இப்போது, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அற்புதமான படைப்புகளைத் தேர்வு செய்து நடிப்பதற்கான உந்துதலைக் காண்கிறேன்.

அது எளிதானது அல்ல. எனக்கு இந்திய படங்கள் மிகவும் பிடிக்கும். ‘வாரணாசி’மூலம் மீண்டும் திரும்பி வந்ததில் மகிழ்கிறேன். ஹாலிவுட், பாலிவுட் என்று பிரித்து பார்க்க விரும்பவில்லை. நான் 2 உலகங்களையும் கடந்து செல்வது போல் உணர்கிறேன். 2 துறைகளிலும் பணியாற்றுவதை ரசிக்கிறேன்.

கலாச்சாரங்களைப் போலவே, இரண்டும் வெவ்வேறு வழிகளில் வேறுபட்டவைதான். ஆனால் இப்போது என்னால் அங்கும் இங்கும் பணியாற்ற முடியும். இது தனித்துவமான, அற்புதமான விஷயம். இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.

ஹாலிவுட்டுக்கு சென்றது ஏன்? -  பிரியங்கா சோப்ரா விளக்கம்
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in