இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு
Updated on
2 min read

புதுடெல்லி: இந்​தி​யா, அமெரிக்கா இடையே வாஷிங்​டனில் இன்று நடை​பெற இருந்த வர்த்தக ஒப்​பந்த பேச்​சு​வார்த்தை தள்ளி வைக்கப்​பட்டு உள்​ளது.

கடந்த ஆண்டு ஏப்​ரலில் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடுகளுக்கான புதிய வரி விதிதங்​களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​தார். இதுதொடர்​பான வழக்கை விசாரித்த அந்த நாட்டு உச்ச நீதி​மன்​றம், புதிய வரி விகிதங்​களை அண்​மை​யில் ரத்து செய்​தது.

15 சதவீதமாக உயர்வு: இதைத் தொடர்ந்து இந்​தியா உட்பட அனைத்து நாடு​களுக்​கும் அமெரிக்க சட்டத்தின் 122-வது பிரிவின் கீழ் 10 சதவீத வரி விதிக்​கப்​படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அடுத்த சில மணி நேரத்​தில் வரி விகிதம் 15 சதவீதமாக உயர்த்​தப்​படு​கிறது என்று அவர் உத்​தர​விட்​டார். அமெரிக்க அரசின் புதிய வரி விகிதம் நாளை முதல் அமலுக்கு வரு​கிறது.

கடந்த ஆண்டு அதிபர் ட்ரம்ப் அமல்​படுத்​திய வரி விதிப்​புக்கு முன்பாக இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்க அரசு 10 சதவீத வரியை விதித்​திருந்​தது. எனினும் அமெரிக்கா​வுக்கு மிக​வும் விருப்​ப​மான நாடு என்ற அந்​தஸ்து காரண​மாக இந்​திய பொருட்களுக்கு 3.5 சதவீத வரி மட்​டுமே விதிக்​கப்​பட்டு வந்​தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஆகஸ்​டில் இந்​திய பொருட்​களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்க அரசு விதித்​தது.

ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தாக குற்றம்சாட்டி மேலும் 25 சதவீத வரி விதிக்​கப்​பட்​டது. ஒட்டுமொத்த​மாக இந்​திய பொருட்​களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்​பட்​டது. இந்த மாத தொடக்​கத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி​யும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பும் தொலைபேசியில் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதில் சுமுக உடன்பாடு எட்​டப்​பட்​டது. இதைத் தொடர்ந்து இந்​திய பொருட்​கள் மீதான வரி 18 சதவீத​மாகக் குறைக்​கப்​படும் என்று அதிபர் ட்ரம்ப் அறி​வித்​தார்.

இது தொடர்​பாக இரு நாடு​கள் இடையே மார்ச் மாதம் வர்த்தக ஒப்பந்​தம் கையெழுத்​தாகும் என்று எதிர்​பார்க்​கப்​பட்​டது. இதற்கு முன்​னோட்​ட​மாக இந்​திய பிர​தி​நி​தி​கள், அமெரிக்க பிர​தி​நி​தி​கள் இடையே வாஷிங்​டனில் இன்று பேச்​சு​வார்த்தை நடை​பெற இருந்தது. அமெரிக்க உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்​பு, அதிபர் ட்ரம்பின் 15 சதவீத கூடு​தல் வரி​ வி​திப்பு காரண​மாக தற்​போது குழப்​ப​மான சூழல் நீடிக்​கிறது.

இந்​திய பொருட்​களுக்கு எவ்​வளவு வரி விதிக்​கப்​படும் என்​பது தொடர்​பாக அமெரிக்க அரசு அதி​காரப்​பூர்​வ​மாக எந்த அறிவிப்பை​யும் வெளி​யிட​வில்​லை. இந்த சூழலில் இந்​தி​யா, அமெரிக்கா இடையே இன்று நடை​பெற இருந்த வர்த்தக ஒப்பந்த பேச்​சு​வார்த்தை தள்ளி வைக்​கப்​பட்டு உள்​ளது. இருதரப்பு பேச்​சு​வார்த்​தைக்​கான புதிய தேதி பின்​னர் முடிவு செய்​யப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இது குறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறும்போது, ”இந்​திய பொருட்​கள் தொடர்​பாக அமெரிக்க அரசு இது​வரை தெளி​வான விளக்​கம் அளிக்​க​வில்​லை. எனவே குழப்​பம் தீரும் ​வரை இரு தரப்பு வர்த்தக ஒப்​பந்த பேச்​சு​வார்த்தை தள்​ளிவைக்​கப்​படலாம்” என்று தெரிவித்துள்ளது​.

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு
காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in