சினிமா துறைக்கு ஏன் வந்தேன்? - ராஷி கன்னா விளக்கம்

சினிமா துறைக்கு ஏன் வந்தேன்? - ராஷி கன்னா விளக்கம்
Updated on
1 min read

இந்​தி​யில் ‘மெட்​ராஸ் கபே’ மூலம் அறி​முக​மான ராஷி கன்னா, தமிழ், தெலுங்​கு, மலை​யாள மொழித் திரைப்​படங்​களி​லும் நடித்து வரு​கிறார்.

தற்​போது இயக்​குநர்​கள் ராஜ் மற்​றும் டிகே உரு​வாக்​கும் ‘ஃபார்ஸி 2’ வெப் தொடர், ரஜினி​யின் ‘தர்மன்’, அக் ஷய் குமார் ஜோடி​யாக காமெடி படம் என நடித்து வரு​கிறார். அவர் திரைத்​துறைக்கு வந்து 13 ஆண்​டு​கள் ஆனதை ஒட்​டி, தனக்கு ஆதர​வாக இருந்த அனைத்து கலைஞர்​களுக்​கும் நன்றி தெரி​வித்​துள்​ளார்.

இதுபற்றி அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “13 ஆண்​டு​கள் என்​பது நீண்ட காலம். ஆனால், இந்​தப் பணி ஒரு​போதும் எனக்கு வாய்ப்பாக இல்​லாமல், பெரு​மை​யாகவே தோன்​றிய​தால், இந்த ஆண்​டு​கள் மிக வேக​மாகக் கடந்​து​விட்​டன.

‘மெட்​ராஸ் கஃபே’ படத்தைத் திரும்​பிப் பார்க்​கும்​போது, நான் ஏன் இந்​தத் துறைக்கு வந்​தேன் என்​பது நினை​வுக்கு வரு​கிறது. எனக்கு முக்​கிய​மான கதைகளைச் சொல்​லும் வாய்ப்பை அந்​தப் படம் கொடுத்​தது. எனது பயணத்​தின் ஒவ்​வொரு கட்​டத்​தி​லும் ஆதரவாக இருந்த அனைத்து சக கலைஞர்​கள், தொழில்​நுட்​பக் கலைஞர்​களுக்கு நன்​றி​யுள்​ளவளாக இருக்​கிறேன்” என்று தெரிவித்​துள்​ளார்.

சினிமா துறைக்கு ஏன் வந்தேன்? - ராஷி கன்னா விளக்கம்
TOXIC: விமர்சனம் - தெறிக்க ஓடவிடும் துன்பியல் சம்பவம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in