

பிப்ரவரி 26-ம் தேதி விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரது திருமணம் நடைபெறவுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி மிகவும் பிரபலம். இருவருமே காதலித்து வந்தாலும், வெளிப்படையாக இருவருமே தங்களுடைய காதலை அறிவித்தது இல்லை. சில தினங்களாக இருவரும் பிப்ரவரி 26-ம் தேதி திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை இருவருமே இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
ஆனால், இருவருமே தங்களுடைய திருமண அழைப்பிதழ் கொடுக்கும் பணியினை தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிப்ரவரி 26-ம் தேதி உதய்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் இருவரது திருமணமும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நட்புகள் சூழ நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. இதில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்துக் கொள்ளவுள்ளனர். விரைவில் தங்களுடைய திருமணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.