பட்ஜெட் அதிகரிப்பு - ‘வாயுபுத்ரா’ படம் நிறுத்தம்?

பட்ஜெட் அதிகரிப்பு - ‘வாயுபுத்ரா’ படம் நிறுத்தம்?
Updated on
1 min read

விஷ்ணு​வின் தீவிர பக்​த​னான பிரகலாதனின் கதையைச் சொன்ன ‘மகாவ​தார் நரசிம்​மா’ என்ற அனிமேஷன் படம் கடந்த ஆண்டு ஜூலை 25-ல் வெளி​யாகி வசூல் அள்​ளியது. ரூ.300 கோடிக்​கும் அதி​க​மாக இப்​படம் வசூலித்​த​தால், அனிமேஷனில் பக்தி படங்​களை எடுப்​பது அதி​கரித்​தது. பல நிறு​வனங்​கள் புதிய அனிமேஷன் படங்​களை அறி​வித்​தன. அதில் ஒன்று ‘வாயு​புத்​ரா’ திரைப்​படம்.

ஹனு​மனின் கதையைச் சொல்​லும் அனிமேஷன் படமான இதைத் தெலுங்கு இயக்​குநர் சந்து மொண்​டேட்டி இயக்​கு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது. வலிமை​யிலும் பக்​தி​யிலும் அசைக்க முடி​யாத ஹனு​மனின் வரலாறும் மலைகளையே நகர்த்​திய அவருடைய பக்தி​யின் கதை​யும், அவரின் நம்​பிக்​கை​யும், தியாக​மும் இந்​தப் படத்தில் இடம்​பெறும் என்​றும் கூறப்​பட்​டது. இதை சித்​தாரா என்டர்டெயின்​மென்ட் சார்​பில் நாக வம்​சி, சாய் சவுஜன்​யா, ஃபார்ச்​சூன் ஃபோர் சினி​மாஸ் இணைந்து தயாரித்​தனர்.

தெலுங்​கு, இந்​தி, தமிழ், மலை​யாளம், கன்னட மொழிகளில் வெளியாகும் என அறிவிக்​கப்​பட்ட நிலை​யில் இப்​படம் நிறுத்தப்பட்​டுள்​ள​தாகத் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. கிராபிக்ஸ் உள்​ளிட்ட தொழில்​நுட்ப விஷ​யங்​களுக்கு மட்​டுமே சுமார் ரூ.38 கோடி செல​வாகும் என்​றும் மற்ற செல​வு​களை​யும் கணக்​கிட்​டால் மொத்த பட்​ஜெட் ரூ.50- 55 கோடிக்​கும் மேல் வருவதால் இப்​படத்தை நிறுத்தி வைத்​துள்​ள​தாகக்​ கூறப்படுகிறது.

பட்ஜெட் அதிகரிப்பு - ‘வாயுபுத்ரா’ படம் நிறுத்தம்?
Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in