‘ஆர்ஆர்ஆர்’ படத்தை விட 5 மடங்கு பெரியது: ‘வாரணாசி’ குறித்து ராஜமவுலி பகிர்வு

‘ஆர்ஆர்ஆர்’ படத்தை விட 5 மடங்கு பெரியது: ‘வாரணாசி’ குறித்து ராஜமவுலி பகிர்வு
Updated on: 
1 min read

ஹைதராபாத்: எஸ்.எஸ்.ராஜமவுலி  இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் வரும் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படம், ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் அளவை விட ஐந்து மடங்கு பெரியதாக இருக்கும் என ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் நடைபெற்ற 50ஆவது சாவ் பாலோ சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய ராஜமவுலி, பெரிய அளவிலான தயாரிப்பாக இருந்தாலும், துல்லியமான திட்டமிடல் மற்றும் அதிகப்படியான ஆவணப் பணிகள் காரணமாக முந்தைய படத்தை விடக் குறைவான நாட்களிலேயே படப்பிடிப்பை முடிக்க முடிந்ததாக விளக்கினார். 

‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு 315 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில், அதை விடப் பெரியதான 'வாரணாசி' திரைப்படத்திற்கு 275 நாட்களிலேயே படப்பிடிப்பு முடிக்கப்பட்டு 40 நாட்கள் மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாகவும், பிரித்விராஜ் சுகுமாரன் வில்லன் பாத்திரத்திலும் நடிக்கின்றனர். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.  

‘ஆர்ஆர்ஆர்’ படத்தை விட 5 மடங்கு பெரியது: ‘வாரணாசி’ குறித்து ராஜமவுலி பகிர்வு
40 ஆண்டுகளுக்கு பின்... ரசிகர்களுடன் ‘ஜெயிலர் 2’ பார்த்த ரஜினி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in