40 ஆண்டுகளுக்கு பின்... ரசிகர்களுடன் ‘ஜெயிலர் 2’ பார்த்த ரஜினி

40 ஆண்டுகளுக்கு பின்... ரசிகர்களுடன் ‘ஜெயிலர் 2’ பார்த்த ரஜினி
Updated on: 
1 min read

ரசிகர்களுடன் திரையரங்கில் அமர்ந்து தனது ‘ஜெயிலர் 2’ படத்தைப் பார்த்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். 40 ஆண்டுகளுக்குப் பின்பு ரசிகர்களுடன் தனது படத்தைப் பார்ப்பது இதுவே முதல் முறை.

இது குறித்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ரஜினிகாந்த் ரசிகர்களுடன் இணைந்து ‘ஜெயிலர் 2’ படத்தை வெள்ளித் திரையில் கண்டு ரசிக்கிறார்’ எனக் கூறி, வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அதில், ஐமேக்ஸ் திரையரங்கின் வாகன நிறுத்தத்தில் ரஜினிகாந்த் காரில் வந்து இறங்கி படம் பார்ப்பதற்காக அரங்கத்தினுள் நுழைகிறார். பின்பு ரசிகர்களுடன் அமர்ந்து ‘ஜெயிலர் 2’ படத்தை கண்டு ரசிக்கிறார். அந்த வீடியோவில் ரஜினியுடன் நெல்சனும், அனிருத்தும் காணப்படுகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெயிலர் 2’. கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சியாக வந்த இப்படம், அக்டோபர்15-ல் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதில் ரஜினியுடன், ரம்யா கிருஷ்​ணன், நமோ நாராயணன், சுராஜ் வெஞ்​சரமூடு, யோகி பாபு, வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். படத்​துக்கு அனிருத் இசை அமைத்துள்​ளார்.

இந்​தப் படம் வெளியான 9 நாளில் உல​களவில் ரூ.628.05 கோடி வசூலித்து ஓடிக் கொண்​டிருக்​கிறது. இதன்மூலம், ‘ஜெயிலர்’ படத்​தின் ஒட்​டுமொத்த வசூலான ரூ.604.74 கோடியை இப்​படம் கடந்​துள்​ளது. இப்​படம். ‘2.0’, ‘லியோ’, ஜெயிலர்’ ஆகிய படங்​களுக்​குப் பிறகு ரூ.600 கோடியை எட்​டிய 4-வது தமிழ்ப் படம் இதுவாகும்.

40 ஆண்டுகளுக்கு பின்... ரசிகர்களுடன் ‘ஜெயிலர் 2’ பார்த்த ரஜினி
‘கணம்’ இயக்குநர் படத்தில் ருக்மிணி வசந்த்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in