

அஜித் குமாரின் ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்தவர், தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா. இவர் தெலுங்கில் ஆர்எக்ஸ் 100, ஹிப்பி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக புதிய படங்களில் நடிக்காமல் இருந்த அவர் தற்போது ‘கம்பேக்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
இதை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கார்த்திகேயா கிரியேட்டிவ் ஒர்க்ஸ் சார்பில் தயாரிக்கும் அவர், இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இதில் அவர் பாக்ஸராக நடிக்கிறார். படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.